;
Athirady Tamil News

நாங்குநேரி சம்பவம்: சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன் – அன்பில் மகேஷ் உறுதி!

0

சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னத்துரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சின்னத்துரை
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் சின்னத்துரை (17). இவர் வள்ளியூரிலுள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே கடந்த ஆண்டு அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த 3 பேர், சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதில் படுகாயமடைந்த இருவரும் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்டநாள் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சாதிய வன்மத்தால் சின்னத்துரையுடன் படித்த சக மாணவர்கள் இந்த தாக்குதலை நடத்தியது அம்பலமானது. இந்த கொடூர தாக்குதலுக்கு ஆளான சின்னத்துரை தனது 12-ம் வகுப்பு காலாண்டு தேர்வை மருத்துவமனையிலேயே எழுதினார்.

அன்பில் மகேஷ்
தற்போது பொதுத்தேர்வை எழுதிய அவர், 600 மதிப்பெண்ணுக்கு 469 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “மாணவரை தொடர்புகொண்டு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து,

11.08.2023 அன்று நான் உறுதியளித்தபடி அவர் விரும்பும் கல்லூரியில் இணைவதற்கு உதவுவதாகவும், அவரின் உயர் கல்விக்கு அனைத்து வகையிலும் துணை நிற்பேன் என்றும் உறுதிப்படுத்தினேன். “கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம் – மு.க” என்று தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.