3-ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு!! வாக்களித்த பின் பிரதமர் மோடி சொன்ன முக்கிய தகவல்!!
மக்களவை தேர்தல்
நாட்டின் அடுத்த அரசை முடிவு செய்யும் மக்களவை தேர்தல் நடந்து வருகின்றது. 10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும் பாஜக, எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி என இரு முனை போட்டி தீவிரமாக உள்ளது.
ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 ஆகிய நாட்களில் 2 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று 3-ஆம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகின்றது.
3-ஆம் கட்ட தேர்தல்
மொத்தம் 93 தொகுதிகளுக்கு குஜராத் – 25, மகாராஷ்டிரா – 11, உத்தரப் பிரதேசம் – 10, மத்தியப் பிரதேசம் – 9, சத்தீஸ்கர் – 7, பீகார் – 5, அசாம், மேற்கு வங்கம் – தலா 4, கோவா, தாத்ரா நாகர் ஹவேலி, டையூ டாமன் தலா 2 என வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.
இன்று நடைபெறும் தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்களாக நாட்டின் உள்துரை அமைச்சர் அமித் ஷா, மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் போன்ற பாஜகவின் முக்கிய வேட்பாளர்கள் இருக்கிறார்கள்.
குஜராத்தின் அகமதாபாத் தொகுதியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தங்களது வாக்குகளை செலுத்தினர். வாக்களித்த பிறகு அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
Voted in the 2024 Lok Sabha elections! Urging everyone to do so as well and strengthen our democracy. pic.twitter.com/PlLCw7Fwe3
— Narendra Modi (@narendramodi) May 7, 2024
2024 மக்களவைத் தேர்தலில் வாக்களித்தது! அனைவரும் அவ்வாறே செய்து நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.