;
Athirady Tamil News

யாழ்.திருநெல்வேலி வர்த்தகருக்கு ஒரு இலட்சத்து 50ஆயிரம் தண்டம்

0

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் உரிமையாளருக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நீதிமன்றினால் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகரினால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, உரிய முறையில் சுட்டு துண்டுகள் இடப்படாத பொருட்கள் , வண்டுகள் மொய்த்த பழுதடைந்த பொருட்கள் என்பவற்றை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி உரிமையாளருக்கு எதிராக யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் , இன்றைய தினம் இடம்பெற்ற விசாரணைகளில் உரிமையாளரை குற்றவாளியாக கண்ட மன்று உரிமையாளரை கடுமையாக எச்சரித்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.