;
Athirady Tamil News

மாலைதீவிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்தியப் படைவீரர்கள்

0

மாலைதீவில் (maldives) நிலைகொண்டிருந்த 51 இந்திய (india) படைவீரர்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மாலைதீவு அரசாங்கம் (Government of Maldives) அறிவித்துள்ளது.

இந்திய அதிபர் (President of India) அலுவலகத்தின் பிரதான பேச்சாளர், குறித்த படையினர் நாடு திரும்பியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், மாலைதீவில் நிலைகொண்டிருக்கும் இந்திய வீரர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது.

மாலைதீவில் உள்ள டோர்னியர் விமானம் (Dornier) மற்றும் உலங்கு வானூர்திகளை நிர்வகிப்பதற்கு இந்தியாவிலிருந்து சிவிலியன் நிபுணர்களை பணியமர்த்துவதற்காக இரண்டு நாடுகளும் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மாலைதீவிலிருந்து இந்திய படையினர் திருப்பி அனுப்பப்பட்டதற்கு காரணம் அந்நாட்டு அதிபரின் தேர்தல் பிரசாரத்தின் ஒரு மூலக்கல்லாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.