சாப்பாட்டு இலையில் இனிப்பு இல்லாததால் நின்று போன திருமணம்.., தாலி கட்டும் முன்பு பிரச்சனை
திருமணத்திற்கு பரிமாறப்பட்ட விருந்தில் இனிப்பு இடம்பெறாததால் தாலி கட்டும் முன்பே திருமணம் நின்று போனது.
இலையில் இனிப்பு இல்லை
தமிழக மாநிலமான கர்நாடகா, குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா ஹனகல்லு கிராமம் சித்தார்த்தா படாவனே பகுதியில் வசித்து வரும் 23 வயது இளம்பெண்ணிற்கும், துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்களின் திருமணம் நேற்று முன் தினம் (மார்ச் 6) நடைபெற இருந்தது. இந்நிலையில், நேற்று சோமவார்பேட்டை டவுனில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இதற்காக மனமக்கள் மேடையில் இருந்த போது, திருமண விருந்தில் தகராறு ஏற்பட்டது. அப்போது சாப்பாட்டு இலையில் சம்பிரதாயப்படி முதலில் இனிப்பு வைக்க வேண்டும்.
அப்போது, இனிப்பு வைக்காமல் நிராகரித்து விட்டதாகவும், சம்பிரதாயத்தை அவமதித்து விட்டதாகவும் பிரச்சனை ஏற்பட்டது.
நின்றுபோன திருமணம்
ஒரு கட்டத்தில் இரு வீட்டாருக்கும் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, மணமகன் வீட்டார் திருமணம் வேண்டாம் என்று கூறினர்.
பின்னர், இரவு முழுவதும் நடந்த பேச்சுவார்த்தையில் பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட தயார் என்று மணமகன் தெரிவித்தார். ஆனால், மணமகள் திருமணத்தை நிறுத்தினார்.
பெண்ணின் குடும்பத்தினர் சமாதானப்படுத்தியும் அவர் சம்மதிக்கவில்லை. பின்னர், பொலிஸில் புகார் அளித்தார். மேலும், திருமண செலவுகள் அதிகமாக செய்யப்பட்டு இருப்பதால் தனது பெற்றோர் நஷ்டம் அடைந்து விட்டதால், அந்த செலவுகளை மணமகன் வீட்டார் தர வேண்டும் என்றும் மணப்பெண் கூறினார்.
பின்னர், திருமண ஏற்பாடுக்கான செலவுகளை மணமகன் வீட்டாரிடம் இருந்து பொலிஸார் பெற்றுக் கொடுத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.