;
Athirady Tamil News

வெளிநாட்டவர் தவறவிட்ட பண பை… பேருந்து காப்பாளரின் நற்செயல்! குவியும் வாழ்த்துகள்

0

நாட்டில் வெளிநாட்டவர் ஒருவர் தவறிட்ட பெரும் தொகை பணம் அடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்து காப்பாளரரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை சாலையில் பேருந்து காப்பாளராக கடமையாற்றும் B.பாலமயூரன் என்பவர் கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி சேவைக் கடமையில் இன்று ஈடுபட்டிருந்தார்.

அந்த பஸ்ஸில் வெளிநாட்டவர் ஒருவரினால் தவறவிடப்பட்ட கடவுச்சீட்டு, 120,840 இலங்கை ரூபா பணம் மற்றும் 300 யூரோ பணத்தினை இன்றைய தினம் திகதி சாலையில் அவரிடம் ஒப்படைத்துள்ளார்.

சமீப நாட்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலையில் உணவுகள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் செய்திகள் வெளியாகி நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பேருந்து காப்பாளரின் குறித்த செயல் பலராலும் பாராட்டப்படுகின்றது.

மேலும், இவர் 2021ம் ஆண்டு மற்றுமொரு பயணி ஒருவரால் தவறவிடப்பட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 70, 000 ரூபா பெறுமதியான போன் ஒன்றினையும் சாலை நிர்வாகத்திடம் ஒப்படைத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.