கொரோனா தடுப்பூசியால் ஆபத்தான பக்கவிளைவு..! சந்தையிலிருந்து வெளியேறும் அஸ்ட்ராஜெனெகா
உலகம் முழுவதும் உள்ள சந்தைகளிலிருந்து ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராசெனெகா (Oxford – AstraZeneca Covid ) தடுப்பூசி திரும்பப் பெறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வர்த்தக ரீதியான காரணங்களால் கொரோனா (COVID 19) தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று (மே 7) முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
அஸ்ட்ராஜெனகாவின் (AstraZeneca) தடுப்பூசியை செலுத்திக் கொண்ட சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக பிரிட்டன் (united kindom) நீதிமன்றத்தில் 50 க்கும் மேற்பட்ட வழக்கு தொடரப்பட்டது.
இது இரத்த உறைவு மற்றும் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை குறைத்தலை இந்த தடுப்பூசி ஏற்படுத்துகிறது என்றும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.
வழக்கில் பதிலளித்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம், கொரோனா தடுப்பூசி மிக அரிதான சந்தர்ப்பங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்தது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசியை தயாரிப்பதையும் விநியோகம் செய்வதையும் நிறுத்திக் கொள்வதுடன், தடுப்பூசியை சர்வதேச சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது.