எங்கு போனாலும் மக்கள் வைக்கும் ஒரு கோரிக்கை: ஜேர்மனியில் கவனம் ஈர்த்துள்ள ஒரு உணவுப்பொருள்
ஜேர்மன் சேன்ஸலர் எங்கு சென்றாலும் மக்கள் ஒரு கோரிக்கை வைக்கிறார்களாம். அது என்னவென்றால், கபாப் என்னும் உணவின் விலையை அரசு குறைக்கவேண்டும் என்பதுதான்!
கவனம் ஈர்த்துள்ள உணவு
ஜேர்மன் மக்கள் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று, கபாப் ஆகும். ஜேர்மன் மக்கள் ஆண்டொன்றிற்கு 1.3 பில்லியன் கபாப்களை சாப்பிடுகிறார்களாம். தற்போது கபாபின் விலை 7.9 யூரோக்களாக உள்ளது. ஆனால், அதிகரித்து வரும் விலைவாசியால் அது மேலும் விலை உயரும் அபாயம் உள்ளது என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.
மக்கள் வைக்கும் ஒரு கோரிக்கை
அரசியல்வாதிகள் எங்கு சென்றாலும், மக்கள், குறிப்பாக இளைஞர்கள் ஒரு கோரிக்கை வைக்கிறார்களாம். அது என்னவென்றால், கபாபின் விலையைக் குறைக்கவேண்டுமென்பதுதானாம்.
அதை அவர்கள் வேடிக்கையாகக் கேட்கவில்லை. சீரியசாகவே கேட்கிறார்கள் என்று கூறும் The German Left Party என்னும் கட்சியைச் சார்ந்த அரசியல்வாதியான Kathi Gebel, அரசு கபாபுக்கு மானியம் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அதாவது, பெரியவர்களுக்கு 4.90 யூரோக்களுக்கும், இளைஞர்களுக்கு 2.50 யூரோக்களுக்கும் கிடைக்கும் வகையில் கபாபின் விலையைக் குறைக்க அரசு ஆவன செய்யவேண்டும் என அவர் கோரியுள்ளார்.