;
Athirady Tamil News

எம்பி பதவியை இழந்த டயானா கமகே: தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

0

சிறிலங்காவின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் (Parliament of Sri Lanka) உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர (Kushani Rohanadeera) தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission of Sri lanka) தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவின் (Diana Gamage) நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 2024 மே மாதம் 08ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டமையால் குறித்த வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(1)ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பதவி வகிக்க தகுதியற்றவர்
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த டயானா கமகே சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என உயர் நீதிமன்றம் நேற்று (08) தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மானை (Mujibur Rahman) நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.