வெளிநாடொன்றில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம்: பலர் காயம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில்(Senegal) உள்ள பிரதான விமான நிலையத்தில் 78 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில்,குறித்த விமானத்தில் பயணித்த 11 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டிரான்சைர் ஏர்லைனுக்கு சொந்தமான போயிங் 737-300 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மூடப்பட்ட விமான நிலையம்
குறித்த விமானமானது மாலி நாட்டுக்கு புறப்படும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தை அடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது சம்பந்தமான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.