முதல் முறையாக வெளிப்படையாக பேசிய ரஷ்ய ஜனாதிபதி புடினின் முன்னாள் காதலி
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சொந்த மக்களை மட்டுமே நம்புகிறார் என அவரது முன்னாள் காதலி புகழ்ந்துள்ளார்.
போருக்கு எதிராக பதிவிடும்
இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடின், அவரது காதலி, ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றுள்ள Alina Kabaeva என்பவரை பிரிந்துள்ளார் என்ற தகவல் வெளியானது. இந்த தம்பதிக்கு ரகசியமாக இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
தற்போது விளாடிமிர் புடின் 39 வயதான Ekaterina Mizulina என்பவரை காதலிப்பதாக தகவல் கசிந்துள்ளது. இவர், ரஷ்ய அரசாங்கத்தின் சமூக ஊடகப் பிரிவில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
உக்ரைன் மீதான போருக்கு எதிராக பதிவிடும் ரஷ்ய சமூக ஊடக பயனாளர்களின் கணக்குகளை முடக்குவதும், அவர்களுக்கு பதிலளிப்பதும் இவரது பணியாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விளாடிமிர் புடினின் முன்னாள் காதலி Alina Kabaeva, அவரது பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளதுடன், தமது முன்னாள் காதலரான புடின் குறித்து பெருமையாக பேசியுள்ளார்.
சொந்த மக்களையே
உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கையை ரஷ்யா முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ள Alina Kabaeva, இது ஒன்றும் எளிதானதல்ல, மிக சிக்கலானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இக்கட்டான நேரத்தில் மக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதும், அவரது கொள்கைகளுக்கு ஆதரவளிப்பதும் பெருமைக்குரிய ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விளாடிமிர் புடின் ஒருபோதும் வெளிநாடுகளை நம்பி செயல்படுவதில்லை என்றும், சொந்த மக்களையே அவர் நம்புகிறார் என்றும் Alina Kabaeva தெரிவித்துள்ளார்.