கிழக்கு நோக்கி நகரும் பூமி: எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்
பூமியானது கிழக்கு நோக்கி நகர்வதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்ற நிலையில் பூமியில் இருந்து அதிகப்படியான நிலத்தடி நீர் எடுக்கப்பட்டுள்ளது இதனால் பூமியின் நிலை மோசமாகிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மனிதர்கள் அதிகளவு நிலத்தடி நீரை வெளியேற்றியதாக சிடெக் டெய்லி(Citech Daily) தெரிவித்துள்ள நிலையில் இதன் விளைவாக பூமி இரண்டு தசாப்தங்களுக்கும் குறைவான காலத்தில் கிழக்கு நோக்கி சுமார் 80 சென்ரிமீற்றர் நகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாதிரி
ஜியோபிசிகள் ரிசர்ச் லெட்டர் என்பது AGU இன் ஜர்னல் ஆகும். இது பூமி மற்றும் விண்வெளி அறிவியலுக்கான தாக்கங்களை கொண்ட ஆராய்ச்சியாவதுடன் 1993 மற்றும் 2010-க்கும் இடைப்பட்ட காலத்தில் மனிதர்கள் 2,150 ஜிகா தொன் நிலத்தடி நீரை வெளியேற்றியதாக காலநிலை மாதிரிகளின் அடிப்படையில் விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.
உலகின் மாபெரும் பகுதிகளான மேற்கு அமெரிக்கா(Western United States) மற்றும் வடமேற்கு இந்தியா(North West India) நிலத்தடி நீரின் பெரும் பகுதியை பயன்படுத்தியுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நிலத்தடி நீர்
இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய சியோல் நஷனல் பல்கலைக்கழகத்தின்(Seoul National University) புவி இயற்பியலாளர் வென் சியோ(Ki-Weon Seo) நிலத்தடி நீர் குறைவது பூமியின் சுழற்சி துருவங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பஞ்சாப்(Punjab) மற்றும் ஹரியானாவின்(Haryana) பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக நிலத்தடி நீர் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுவாக ஒரு இடத்தில் இருந்து அதிக தண்ணீரை பிரித்தெடுத்த பிறகு அது ஆறுகள் மற்றும் கடல்களில் பாய்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.