குறிகாட்டுவான் இறங்கு துறைக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் – இடையூறுகளை அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்து!
புங்குடுதீவு, குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நெடுந்தீவிற்கும் குறிகாட்டுவானுக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் வடதாரகை மற்றும் குழுதினி படகுகள் இறங்குதுறையில் நீண்ட நேரம் திறுத்தப்படும் போது ஏற்படும் சிரமங்கள் இடையூறுகள் தொடர்பில் ஆராய்ந்துகொண்டார்.
பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினராலும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்தே இந்த நேரடி கள விஜயம் இன்று(10) இடம்பெற்றது.
குறித்த விஜயத்தின் போது நிலைமைகளை பார்வையிட்டதுடன், ஏற்படும் இடையூறுகளை அகற்றுவது தொடர்பில் துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி இலகுவான வழிமுறைகளை ஏற்படுத்தி கொடுத்தார்.
குறித்த விஜயத்தின்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் வேலனை பிரதேச செயலர், நெடுந்தீவு பிரதேச செயலர் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் படகு உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் .