வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட சாவகச்சேரி வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொது சந்தையில் வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட ஐந்து , வியாபாரிகளுக்கு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினால் , பொது சந்தையில் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதன் போது பழுதடைந்த மரக்கறிகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.
அதேவேளை , வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட ஐந்து வியாபாரிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.