யாழ் மாவட்ட அரசாங்க அதிபருடன் இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் WBJK ஜனக விமலரத்ன RWP RSP சந்திப்பு!
யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை புதிதாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட 51ஆவது படைப்பிரிவின் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் WBJK ஜனக விமலரத்ன RWP RSP அவர்கள் மரியாதை நிமித்தமாக இன்றையதினம் (10.05.2024) காலை 11.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினாா்.
இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அண்மைக்கால நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடினாா்.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் எஸ்.சிவரூபன் உதவி மாவட்ட செயலாளர் உ.தர்சினி ஆகியோா் கலந்து கொண்டிருந்தார்கள்