வளைகுடா பகுதியில் பற்றி எரியும் கப்பல்கள்….! ஹவுதியின் திடீர் ஏவுகணை தாக்குதல்
ஹவுதி (Houthi) கிளர்ச்சிப் படையினர் ஏடன் வளைகுடா (Gulf of Aden) பகுதியில் பயணித்த 3 கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
பலஸ்தீனத்துக்கு (Palestine) எதிரான போரை இஸ்ரேல் (israel) கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி செங்கடல், ஏடன் வளைகுடா பகுதியில் பயணிக்கும் கப்பல்களை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 07 ஆம் திகதி ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்த 3 கப்பல்களை குறிவைத்து ஹவுதி படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சேத விபரங்கள்
தாக்குதலுக்கு உள்ளான 3 கப்பல்களும் இஸ்ரேல் (israel) அரசுடன் தொடர்புடையவை என ஹவுதி கிளர்ச்சிப் படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரை சேத விபரங்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில் ஏடன் வளைகுடா பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காசா (gaza) மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்களில் இதுவரை 34,904 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 78,514 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.