காலமானார் அபுதாபி இளவரசர் ஷேக் ஹஸ்ஸா!
அபுதாபி (Abu dhabi) இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Hazza bin Sultan bin Zayed Al Nahyan ) காலாமானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், இவர் நேற்று முன்தினம்(09) காலமானதாக அபுதாபி அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காலமான அபுதாபி இளவரசர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் மூத்த மகனாவார்.
இரங்கல் குறிப்பு
இந்நிலையில், இவரது மறைவிற்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் அதிபர் அலுவலகம் இவருக்கு இரங்கல் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இறைவன், இவருக்கு பரந்த கருணையை கொடுக்க வேண்டும் அத்தோடு அவருக்கு சொர்க்கத்தை வழங்க வேண்டும்.
அபுதாபி இளவரசர்
அத்தோடு அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் ஆறுதலை வழங்க எல்லாம் வல்ல இறைவன் அல்லா அருள் புரிய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அபுதாபி இளவரசரின் வயது குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை என்பதுடன் இவர் குதிரை சவாரி செய்யும் வல்லமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.