தைவானை மீண்டும் உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தைவானில் (Taiwan) சக்திவாய்ந்த நிலநடுக்மொன்று மீண்டும் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது, ஹுலியன் மாகாணத்தின் கடற்பகுதியில் நேற்று(10) மாலை ஏற்பட்டுள்ளதாக சீன நில அதிர்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.8 என்ற அளிவில் ஹுலியன் கடற்பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ளது.
உயிரிழப்புக்கள்
அத்தோடு, நேற்றையதினம் இடம்பெற்ற இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புக்கள் ஏதும் பதிவாகவில்லை.
மேலும், கடந்த மாதம் தைவானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தால் 12 பேர் வரை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.