கனடாவில் வேலைவாய்ப்பு: புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தகவல்
கடந்த மாதம் கனடாவில் சுமார் 90000 புதிய வேலை வாய்ப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயத்தை கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஓராண்டு காலப்பகுதியினுள் பதிவாகிய அதிக வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை இதுவெனவும் கூறப்படுகிறது.
வேலை இன்மை
அத்துடன், கனடாவில் பகுதி நேர வேலைவாய்ப்புக்களின் காரணமாகவே இவ்வாறு வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதேவேளை, கடந்த மாதம் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 6.1 % ஆக பதிவாகியுள்ளது.
மேலும், கனடாவில் சுகாதாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், உணவு சேவை உள்ளிட்ட சில துறைகளில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் இளையோர் மத்தியில் வேலைவாய்ப்பு இன்மை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.