;
Athirady Tamil News

ஆண் என தெரியாமல் 27 ஆண்டுகளாக பெண்ணாக வாழ்ந்தவருக்கு.., திருமணத்திற்கு முன்பு அதிர்ச்சி

0

27 ஆண்டுகளாக பெண்ணாக வாழ்ந்தவருக்கு திருமணத்திற்கு முன்பு தான் ஆண் என்று அறிந்தததால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

சீன பெண்
மத்திய சீனாவில் வசித்து வரும் பெண் லி யுவான். இவர், சீரற்ற மாதவிடாய் பிரச்சனை மற்றும் தாமதமான மார்பக வளர்ச்சி ஆகியவற்றை எதிர்கொண்டு வந்துள்ளார்.

இதற்காக தன்னுடைய 18 வயதில் இருந்தே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டு வந்துள்ளார். அப்போது, ஹார்மோன் அளவுகள் அசாதாரணமாக இருப்பதும், கருப்பை பிரச்சனை இருப்பதும் கண்டறியப்பட்டது.

அதற்காக முதலில் குரோமோசோம் பரிசோதனையை மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். ஆனால், லி யுவானும், அவரது குடும்பத்தினரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தனர்.

பின்பு, சில ஆண்டுகளுக்கு பிறகு லி யுவானை திருமணத்திற்கு முன்பு முழுமையான பரிசோதனை மேற்கொள்ளுமாறு மூத்த மகப்பேறு மருத்துவ நிபுணரான டுவான் ஜீ அறிவுறுத்தினார்.

அப்போது தான் அவருக்கு congenital adrenal hyperplasia (CAH) என்ற பிரச்சனை இருப்பது தெரியவந்தது. அதாவது ஆணுக்குரிய குரோமோசோம்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

அவருக்கு, ஆணுக்குரிய பிறப்புறுப்பு அடிவயிற்றின் உள்ளே இருந்தது. ஆனால், அவர் பெண்ணாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த குறைப்பாடு, 50,000 பேரில் ஒருவருக்கு மட்டுமே இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை ஏற்பதற்கு லி யுவானுக்கு சவாலாக இருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.