ஜேர்மானியர்களுக்கு புலம்பெயர்தல் குறித்துதான் அதிக பயம்: ஆய்வு முடிவுகள்
பனி அதிகம் பெய்யும் நாடுகளில் பனி பெய்யாததால் மக்களால் பனிச்சறுக்கு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது, சுற்றுலாவால் வரும் வருவாய் பாதிக்கிறது. வெயில் அதிகம் அடிக்கும் நாடுகள் என கருதப்படும் பாலைவனங்கள் உள்ள நாடுகளில் மழை கொட்டித்தீர்க்கிறது. பெருவெள்ளத்தால் மக்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
இது பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பயங்கர மாற்றம் என்பதை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க யாரும் தயாராக இல்லை. இப்படி உலகையே மாற்றிவரும் பருவநிலை மாற்றம் என்னும் பயங்கர விடயத்தை விட, புலம்பெயர்தலைக் குறித்துதான் அதிகம் பயப்படுகிறார்களாம் ஐரோப்பியர்கள்.
முதலிடம் வகிக்கும் ஜேர்மனி
அப்படி பருவநிலை மாற்றத்தைவிட, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தத்தான் அரசு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என கருதும் மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் முன்னிலை வகிக்கிறது ஜேர்மனி.
தங்கள் முக்கிய பிரச்சினை புலம்பெயர்தல்தான் என கூறுவோர் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு இருந்ததைவிட ஜேர்மனியில் தற்போது 44 சதவிகிதம் அதிகரித்துள்ளதை சமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகள் காட்டுகின்றன.
போருக்கும், வறுமைக்கும், பசிக்கும் பயப்படும் மக்கள், அதைவிட குறைவாகத்தான் பருவநிலை மாற்றம் குறித்து கவலைப்படுகிறார்கள் என்கிறது அந்த ஆய்வு.