யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (10.05.2024) மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் பிரதேச மட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.
மேலும், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டங்கள், உலக உணவுத்திட்டம், காணி உரித்து சான்றிதழ்கள் வழங்குதல்,நலன்புரி நன்மைகள் (அஸ்வெஸ்சும), குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கிடையிலான சூரியகல அடுக்கு வீட்டுத்திட்டம் மற்றும் விவசாய நவீனமயமாக்கல் திட்டம் உள்ளிட்ட விடயங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்( காணி), பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், பிரதி மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்.