யாழில். வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்தில் இருவர் வாளுடன் கைது – மோட்டார் சைக்கிளும் மீட்பு
யாழ்ப்பாணத்தில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இருவர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரை வழிமறித்து கத்தியை காட்டி அவரது சங்கிலியை மூவர் அடங்கிய வழிப்பறி கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்று இருந்தது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் , பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் வழிப்பறி கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் இருவரை கைது செய்துள்ளதுடன் , வழிப்பறி கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் , வாள் ஒன்றினையும் அவர்களிடம் இருந் பொலிஸார் மீட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த வழிப்பறி கொள்ளை கும்பலை சேர்ந்த மற்றுமொரு நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் , அவரையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.