பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கான தீர்வு எதிர்வரும் திங்கட்கிழமை (13) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன் பிரகாரம் அவர்களின் மேலதிக கொடுப்பனவு மற்றும் 2016ஆம் ஆண்டு தொடக்கம் சம்பளப் பட்டியலில் நிலவும் முரண்பாடுகளைக் களைய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்..
வேலைநிறுத்தப் போராட்டம்
இதற்கிடையே பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம் இன்றுடன் ஒன்பதாவது நாளாகவும் தொடர்கின்றது.
இந்நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை தங்கள் கோரிக்கை தொடர்பில் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படாது போனால் தீவிரமான முறையில் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவது மட்டுமன்றி அத்தியாவசிய சேவைகளில் இருந்தும் ஒதுங்கிக் கொள்ளப் போவதாக பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.