போலி வீசா முகவர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம்
ஐக்கிய இராச்சியத்திற்கு (United Kingdom) வீசா சேவைகளை வழங்குவதாகக் கூறி போலி முகவர்களால் மேற்கொள்ளப்படும் மோசடி தொடர்பில் இலங்கையர்களை அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, ஒரு அறிவிப்பை வெளியிட்டு பிரித்தானியாவுக்கான வீசா செயன்முறையை விரைவுபடுத்த முடியும் என்றும் அல்லது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்துமாறும் மோசடிக்காரர்களால் கேட்கப்படுகின்றது.
மூன்றாம் தரப்பினர்
இந்நிலையில், தாம் விண்ணப்பத்துக்காக உதவி பெறும் மூன்றாம் தரப்பினர் உண்மையானவர்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு உயர்ஸ்தானிகரகம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், வீசா விண்ணப்ப செயன்முறைகளை, மூன்றாம் தரப்பினரிடம் ஒப்படைப்பதற்கு முன்னர் அது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்குமாறும் பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் அறிவுறுத்தியுள்ளது.