பாகிஸ்தானிடம் இருக்கும் அணுகுண்டு: எழுந்துள்ள சர்ச்சை
பாகிஸ்தானிடம் (Pakistan) அணுகுண்டு இருப்பது தொடர்பில் இந்தியா (India) மதிப்பளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் ஐயர் (Mani Shankar Aiyar) கூறியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேர்காணல் ஒன்றின்போது கருத்துரைத்த மணிசங்கர் ஐயர், பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதை இந்தியா மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானும் இறையாண்மை கொண்ட நாடாகும்.
கதிரியக்க கதிர்கள்
எனவே, அந்த மரியாதையை தக்க வைத்துக் கொண்டு, எவ்வளவு கடுமையாக வேண்டுமானாலும் அந்த நாட்டை பற்றி பேசுங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அதன் அணுகுண்டை லாகூரில் வெடிக்கவைத்தால் அதன் கதிரியக்கக் கதிர்கள் 8 வினாடிகளில் அமிர்தசரஸை அடையும்.
இந்நிலையில், இந்தியா அவர்களுக்கு மரியாதை கொடுக்காவிட்டால், இந்தியாவுக்கு எதிராக அணுகுண்டைப் பயன்படுத்த அவர்கள் நினைப்பார்கள்.
பதவி விலகல்
அதனைப்பற்றி பேசாவிட்டால், அவர்கள் அணுகுண்டை வெடிக்கவைப்பது பற்றி சிந்திக்கமாட்டார்கள் என்றும் மணிசங்கர் ஐயர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே காங்கிரஸின் சர்வதேச தலைவரான சேம் பிட்ரோடா, தென்னிந்தியர்களை ஆபிரிக்கர்கள் போன்று இருக்கிறார்கள் என்று கூறிய விடயம், சர்ச்சைக்கு உள்ளானது.
இதனை எதிர்க்கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸும் நிராகரித்த நிலையில், அவர் காங்கிரஸில் இருந்து பதவி விலகிய சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.