தாய், மனைவி மற்றும் பிள்ளைகள் என மொத்த குடும்பத்தையும் சுட்டுக்கொன்ற நபர்! பின்னர் அவர் எடுத்த முடிவு
இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் தொழிலாளி ஒருவர் தனது மனைவி, பிள்ளைகள் உட்பட ஐந்து பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உத்தர பிரதேசத்தின் ராம்பூர் மதுரா பகுதியைச் சேர்ந்தவர் அனுராக் சிங் (45). மதுப்பழக்கத்திற்கு அடிமையான அனுராக் சமீப காலமாக மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் திடீரென துப்பாக்கியுடன் தாய் சாவித்திரியின் அறைக்கு சென்று சரமாரியாக சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சாவித்திரி அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து அங்கு வந்த மனைவி பிரியங்கா (40), பிள்ளைகள் அர்னவ் (12), ஆதித்யா (8) மற்றும் ஆர்வி (8) என அனைவரையும் அனுராக் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.
குண்டு பாய்ந்த நால்வரும் உயிரிழந்ததையடுத்து அனுராக் தன்னைத் தானே தலையில் சுட்டுக்கொண்டு அங்கேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆறு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.