தூக்கில் தொங்கிய நிலையில் 9 வயது சிறுமி! விளையாட்டால் விபரீதமா என விசாரணை
தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் 9 வயது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டின் நந்தீஸ்வரர் காலனி 4வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பிரபு என்பவரின் மகள் ஹன்சிகா (9).
சிறுமி ஹன்சிகா நந்திவரம் அரசு பாடசாலையில் 3ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்றைய தினம் ஹன்சிகாவின் தங்கை தனது சகோதரி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது, கட்டில் மேல் நாற்காலி போடப்பட்டிருந்துள்ளது. அதற்கு மேல் மின்விசிறியில் சிறுமி துப்பட்டா துணியில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.
உடனடியாக சிறுமியை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், சிறுமி ஹன்சிகா விளையாட்டாக துப்பட்டாவை மாட்டிக் கொண்டதால் உயிரிழந்தாரா அல்லது தூக்குபோட்டுக் கொண்டாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.