தோலின் நிறம் காரணமாக மகள் குடும்பத்தையே கொல்ல முயன்ற தாய்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்
தன் மகள் ஆப்பிரிக்கப் பின்னணி கொண்ட ஒருவரை திருமணம் செய்துகொண்டதால், அவரது குடும்பத்தையே கொல்ல முயன்றுள்ளார் ஒரு பெண்.
குடும்பத்தையே கொல்ல முயன்ற பெண்
வெள்ளையினப் பெண் ஒருவரின் மகள், தன் தாயின் விருப்பத்துக்கு எதிராக பிரான்ஸ் மொராக்கோ பின்னணிகொண்ட ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆகவே, அந்த தம்பதியருக்குப் பிறந்த குழந்தையும் சற்றே பழுப்பு நிறத்தோலுடன் பிறந்துள்ளான். ஆகவே, கருப்பினப்பின்னணி கொண்டவர்களை வெறுக்கும் அந்தத் தாய், தன் மருமகன் மீதும், பேரன் மீதும் வெறுப்பு காட்டிவந்துள்ளார்.
ஒரு நாள், மகள் வீட்டுக்கு கேக் ஒன்றை செய்து அனுப்பியிருக்கிறார் அந்தப் பெண். என்னடா, அம்மா கேக் எல்லாம் செய்து அனுப்பியிருக்கிறாரே, திருந்திவிட்டாரோ என்று எண்ணியபடியே கேக்கை வெட்ட, கேக்குக்குள் மாத்திரைகள் பல இருந்துள்ளன.
யார் செய்த புண்ணியமோ, மகள் குடும்பத்தையே கொல்ல அவர் கேக்கில் கலந்த மாத்திரைகள் கரையாததால் அந்தக் குடும்பம் தப்பியுள்ளது.
இப்படியே பலமுறை பல விடயங்கள் நடந்துள்ளன. ஏணியில் உள்ள ஸ்குரூவை அகற்றிவைத்துவிட்டு, மருமகனை மேலே ஏறி வேலை செய்ய சொல்வது, பெற்றோருக்குத் தெரியாமல் குழந்தையை காயப்படுத்துவது என அந்தப் பெண்ணின் வெறுப்பு காட்டும் செயல்கள் தொடர்ந்துள்ளன.
பதில் சொன்ன காலம்
எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும் என்பார்கள். அதேபோல, அந்தப் பெண்ணின் நடவடிக்கைகளால் வெறுத்துப்போன அவரது கணவர், மனைவியை விட்டு விட்டு தனியே சென்றுவிட்டார்.
ஒரு கட்டத்தில் அவர் இறந்துபோக, அவர் தனது சொத்துக்கள் முழுவதையும் தன் பேரனுக்கு எழுதிவைத்துள்ளது தெரியவர, அந்தப் பெண்ணுக்கு கோபம் எல்லை மீறி போய்விட்டிருக்கிறது.
அந்தப் பெண்மணியை முதியோர் இல்லம் ஒன்றில் கொண்டு சேர்ப்பதற்காக, அவரது மகள் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது, மகளைப் பிடித்து திடீரென பேருந்தின் முன் தள்ளி விட்டிருக்கிறார் அந்தப் பெண்மணி. அதிர்ஷ்டவசமாக அவர் தப்பியிருக்கிறார்.
கடைசியாக அவர் மரணமடைய, அவர் மீதான வெறுப்பால் அவரது பேரன் அவரது இறுதிச்சடங்குக்கு கூட போகவில்லையாம். தாய் என்பதால் வேறு வழியில்லாமல் அவரது மகளும், கூடவே மருமகனும் இறுதிச்சடங்குக்கு சென்றால், அங்கே இறுதிச்சடங்கு நடத்தும் பாதிரியாரைத் தவுர யாரும் அந்தப் பெண்மணியின் இறுதிச்சடங்குக்கு வரவில்லையாம்!