யாழில் பரபரப்பு சம்பவம்… திடீரென தீப்பற்றி எரிந்த தென்னை மரம்!
யாழ்ப்பாணத்தில் தென்னை மரம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக வெப்பத்துடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில் நேற்று (10-05-2024) யாழில் திடீரென மழை பெய்துள்ளது. இதேசமயம் இடி மின்னல் தாக்கமும் ஏற்பட்டது.
குறித்த இடி மின்னல் தாக்கத்தின் போது யாழ்.உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் காணப்பட்ட தென்னைமரமொன்று திடீரென மின்னல் தாக்கி தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.