;
Athirady Tamil News

கரட் துண்டால் பறிபோன குழந்தையின் உயிர்

0

கரட் துண்டொன்று தொண்டையில் சிக்கியதில்,19 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 11ஆம் திகதி மாலை வீட்டில் இருந்த போது இந்த துயரம் இடம்பெற்றுள்ளது. உடனடியாக , குழந்தையை 1990 அம்புலன்ஸ் சேவையின் ஊடாக நொச்சியாகம மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

நொச்சியாகம மாவட்ட வைத்தியசாலையில் இருந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு குழந்தையை உடனடியாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்து.

ஆனால் வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே குழந்தை உயிரிழந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.