;
Athirady Tamil News

பெருந்திரளானோரின் கண்ணீருடன் மலேசியாவில் உயிரிழந்த இளைஞனின் சடலம் அடக்கம்

0

மலேசியாவில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த தமிழ் இளைஞனின் சடலம் (12.05.2024) மாலை அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மஸ்கெலியா, மொடிங்ஹேம் தோட்டத்தைச் சேர்ந்த ராஜகுமார் டேவிட்சன் என்ற 24 வயது திருமணமாகாத இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மலேசியா கோலாலம்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த மாதம் 24 ஆம் திகதி கொதிகலன் (Boiler) குறித்த இளைஞன் மீது விழுந்ததில் படுகாயமடைந்து கோலாலம்பூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இறுதி கிரியைகள்

இந்நிலையில் கடந்த 5 ஆம் திகதி காலை சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக விராசணைகளை மேற்கொண்டிருந்த அந்நாட்டு பொலிஸார் இளைஞனின் குடும்பத்தினருக்கு அறிவித்திருந்தனர்.

இதற்கமைய, இளைஞனின் சடலம் இலங்கையின் மஸ்கெலியா மோட்டிங்ஹாம் பிரிவில் உள்ள பிரன்சுவிக் தேயிலைத் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இன்று (12) Brunswick Tea Estate, Mottingham Section பொது மயானத்தில் அடக்கம் செய்யப்டப்டுள்ளது.

குறித்த இளைஞன் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மலேசியாவிற்கு வேலைக்காக சென்றிருந்த நிலையில் இந்த அனர்த்தத்திற்கு முகம்கொடுத்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.