சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் தீப்பரவல்
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மின்னல் தாக்கி தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று மாலை 5.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் புகையை வெளியேற்றும் எரிவாயு குழாய் மீதே மின்னல் தாக்கியுள்ளது.
மின்னல் தாக்கம்
தற்போது வரை தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுத்திகரிப்பு நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மின்னல் தாக்கம் காரணமாக எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.