கொழும்பு – மட்டக்குளியில் காணாமல் போயுள்ள வயோதிபர் : பொலிஸில் முறைப்பாடு
கொழும்பு 15 (Colombo) – மட்டக்குளி, அலிவத்தை பகுதியில் வயோதிபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வயோதிபர் நேற்று முன்தினம் (11) காலை தனது வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.
காணாமல் போன வயோதிபர்
அலிவத்தை பகுதியை சேர்ந்த 72 வயதுடைய ஆண்டி மாணிக்கம் என்ற நபரே காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இவர் காணாமல் போன தினத்தில் நீல நிற கட்டமிட்ட சட்டை மற்றும் சாரம் அணிந்திருந்ததாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இவரைப் பற்றிய தகவல் அறிந்தாலோ அல்லது இவரை எங்காவது கண்டாலோ இவரது உறவினர்களது தொலைபேசி இலக்கங்களான 076-1393975 அல்லது 077-3688870 க்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.