கொரோனா தடுப்பூசிகளினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: வெளிவந்த அதிர்ச்சி பின்னணி
கொரோனா வைரஸை (COVID – 19) கட்டுப்படுத்துவதற்காக பெறப்பட்ட தடுப்பூசிகளினால் உலகம் முழுவதிலும் இதுவரை 11,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த விடயமானது, 2023 இல் ஐரோப்பிய மருந்துகள் முகமை வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி, தேசிய செய்தித்தாள் ஒன்று இதனை குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, ஃபைசர் தடுப்பூசி போடப்பட்ட 8,000 பேர் உயிரிழந்துள்ளதுடன் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியைப் பெற்ற 1,500 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மீளப்பெறப்பட்ட தடுப்பூசிகள்
இந்த நிலையில், அஸ்ட்ராஜெனிகா (Oxford-AstraZeneca) கொரோனா தடுப்பூசிகள் குறித்த நிறுவனத்தால் மீளப்பெறப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த தடுப்பூசியானது, மூன்று பில்லியனுக்கும் அதிகமான டோஸ்கள் வழங்கப்பட்ட பிறகே திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உலகம் முழுவதும் இது தொடர்பான விவாதம் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.