ஐ.நாவின் தடையை முற்றாக புறக்கணித்த வடகொரியா: தொடர் அணு ஆயுத சோதனை
கொரிய தீபகற்பத்தில் வடகொரியாவானது தொடர் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை மேற்கொண்டு வருகிறது.
நீண்ட தூர ஏவுகணை சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐ.நா விதித்துள்ள தடைகளையும் மீறி வடகொரிய இவ்வாறு செய்து வருகிறது.
அத்தோடு, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) பியாங்க்யாங்கில் உள்ள இராணுவ தளமொன்றிற்கு விஜயம் மேற்கொண்டு ஆய்வுகளை நடத்தியுள்ளார்.
இலக்கு வைத்து தாக்குதல்
இதன் போது, அந்நாட்டு இராணுவம் புதிய மல்டிபிள் ரொக்கெட் சோதனையை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், வடகொரியா தங்கள் நாட்டை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் விதமாக சோதனைகளை மேற்கொண்டு வருவதாக தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.