;
Athirady Tamil News

தனது நீண்டகால நண்பரை அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கிய புடின்

0

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவை ஜனாதிபதி புடின் பதவி நீக்கம் செய்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான தாக்குதலில் ரஷ்ய துருப்புகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. இந்த நிலையில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சரும், புடினின் நீண்டகால நண்பருமான செர்ஜி ஷோய்கு (Sergei Shoigu) பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக புதிய அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக ஆண்ட்ரி பெலோசோவ் (65) முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் செர்ஜியை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராக புடின் நியமித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து புடின் மேற்கொண்ட மிக முக்கியமான இராணுவத்தின் மறுசீரமைப்பு இதுவாக பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.