315 உயிர்களை பலிவாங்கிய பேரழிவு! 1,600 பேர் காயம்..அவசரகால நிலை அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 315 ஆக உயர்ந்துள்ளது.
கனமழை வெள்ளம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெய்த கனமழையால் பல்வேறு மாகாணங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பல மாகாணங்களில் உள்ள கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்கள் முழுவதும் நீர் மற்றும் சேறு நிறைந்த ஆறுகள் சூழ்ந்தன.
குறிப்பாக, வடக்கு பாக்லான் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமடைந்தன.
பலி எண்ணிக்கை 315
முதற்கட்டமாக வெள்ளத்தில் சிக்கி 50 பேர் பலியானதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 315 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,600 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அதிகாரிகள் அவசரகால நிலையை அறிவித்துள்ளனர். இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று பெய்த கனமழைக்குப் பிறகு பலரைக் காணவில்லை என ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.