பசும்பாலில் மிக ஆபத்தான பறவைக் காய்ச்சல் அறிகுறிகள்… மனிதர்களுக்கு கடத்தப்படும் அபாயம்
பல எண்ணிக்கையிலான பசுக்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் பால்பண்ணைத் துறையினர் அச்சம் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கால்நடை மருத்துவர் ஒருவரே தொடர்புடைய அதிர்ச்சி சம்பவத்தை கண்டறிந்துள்ளார். இதன் பின்னணி தொடர்பில் அவரால் உறுதியான தரவுகளை கண்டறிய முடியவில்லை என்றே கூறப்படுகிறது.
பசுக்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பால் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பசுவின் பால் மிகவும் கெட்டியாகவும் நிறமற்றத்தன்மையுடனும் காணப்பட்டுள்ளது.
அத்துடன் பல விவசாயிகள் தங்கள் கால்நடைகள் திடீர் நோய் பாதிப்பால் மரணமடைவதாக குறிப்பிட்டுள்ளதை நினைவுகூர்ந்த அந்த மருத்துவர், கவலை அடைந்துள்ளார்.
Mastitis பாதிப்பு என்பது பொதுவாக பண்ணையில் வளர்க்கப்படும் பசுக்களுக்கு காணப்படும் நோயாகும். மட்டுமின்றி, பசு மடி தொற்றானது பாலில் சீழ் கசிவதற்கு காரணமாகிறது.
பொதுவாக 1 லிற்றர் பசும்பாலில் 400,000,000 சீழ் செல்கள் காணப்படும் என்றே கூறுகின்றனர். ஆனால் டெக்சாஸ் மாகாண பசுக்கள் Mastitis பாதிப்பைவிட ஆபத்தான நிலையில் இருப்பதாகவே அந்த மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
டென்மார்க்கிலும் இதே அறிகுறி
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பசுக்களின் பாலை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பசுக்களுக்கு பறவைக் காய்ச்சல் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் அந்த மருத்துவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட பசுக்களால் இந்த தொற்றானது மனிதர்களுக்கும் பரவும் ஆபத்து இருப்பதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் அச்சம் கொண்டுள்ளனர். இன்னொரு பெருந்தொற்றுக்கு இது காரணமாகக் கூடும் எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.
டெக்சாஸ் பசுக்களை அடுத்து தற்போது டென்மார்க்கிலும் இதே அறிகுறிகளை பசுக்களில் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதே நிலை நீடித்தால், மனிதர்களுக்கு மிக விரைவில் இதன் அறிகுறிகள் தென்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுவரை ஒரே ஒருவருக்கு மட்டும் பாதிக்கப்பட்ட பசுவால் H521 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.