;
Athirady Tamil News

பிரித்தானியாவில் Jet Skisயில் பயணித்தவருக்கு நேர்ந்த பரிதாபம்

0

ஸ்கொட்லாந்தில் 42 வயது நபர் ஒருவர் ஜெட் ஸ்கைஸில் சென்றபோது விபத்தில் சிக்கி பலியானார்.

கடற்கரையில் ஜெட் ஸ்கைஸ்
42 வயதுடைய நபர் ஒருவர் ஸ்கொட்லாந்தின் Dumfries மற்றும் Galloway கடற்கரையில் ஜெட் ஸ்கைஸில் பயணித்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக மற்றொரு ஜெட் ஸ்கைஸ் மீது அவர் பயணித்த வாகனம் மோதி விபத்திற்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த குறித்த நபர் உடனடியாக Air Ambulance மூலமாக மீட்கப்பட்டு, கிளாஸ்கோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விசாரணைகள் தொடர்கின்றன
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அவர் உயிரிழந்தார். அவரது உறவினர்களுக்கு தகவல் கூறப்பட்டது.

மேலும், இந்த விபத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. விபத்து குறித்து துப்பறிவு ஆய்வாளர் Graeme Robertson கூறுகையில்,

”எனது எண்ணங்கள் அந்த மனிதனின் குடும்பத்தினர் மற்றும் இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உள்ளது. இந்த மோதலுக்கு என்ன வழிவகுத்தது என்பதை நிறுவுவதற்கான எங்கள் விசாரணைகள் தொடர்கின்றன மற்றும் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல் யாரேனும் இருந்தால், அல்லது ஏதேனும் கண்டால் முன்வருமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.