;
Athirady Tamil News

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடெங்கிலுமுள்ள பல்கலைக் கழகங்களில் கடந்த 2ம் திகதி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தம்

0

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடெங்கிலுமுள்ள பல்கலைக் கழகங்களில் கடந்த 2ம் திகதி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்க இணைச் செயலாளர்
த.சிவரூபன் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ள கல்வி சாரா ஊழியர்கள் தொடர்ச்சியாக தமது சம்பள இடர்பாட்டிற்கான தீர்வுகளை 8 வருடங்களிற்கு மேலாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அமைச்சிடம் இதுதொடர்பாக கடிதங்களை எழுதியும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டும் எந்தப்பலனும் இல்லாத காரணத்தினால் நாம் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தை மேற்கொண்டுள்ளோம். இதற்கான காரணங்களை விபரிக்கின்றோம்.

A. MCA கோரிக்கை கடந்த காலங்களில் அதிகரிப்பை தரவேண்டும் என்று பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் மோகன் டி செல்வா காலப்பகுதியில் அதன் பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 2016 இற்கு பின் இன்றுவரை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை.

B. 2016 ம் ஆண்டு காலப்பகுதியில் நல்லாட்சி அரசால் அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு 107% ஆல் 2020ம் ஆண்டில் அதிகரித்த போதும் எமக்கு 93% க்கு குறைவாகவே அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இவற்றை மறுசீரமைத்து எமது இவ் வேண்டுகோள்களை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் கோவைற் பெருந்தொற்று, இயற்கை அனர்த்தம் மற்றும் பொருளாதார நெருக்கடி காலப்பகுதியில் நாம் மௌனம் சாதித்த போதிலும் எமது கோரிக்கைகளை அவ்வப்போது வலியுறுத்தியே வந்துள்ளோம். இவை தொடர்பான கோரிக்கைகள் 2016 முன்வைக்கப்பட்ட போதும் எமது முயற்சிகள் பின்வருமாறு அமைந்து தோல்வியை தழுவின. அவை பின்வருமாறு.

1. 14.02.2020 அமைச்சருடனான கலந்துரையாடல் கோவைட் பெருந்தொற்றின் பின்னர் தீர்ப்பதற்கு இணக்கம் தெரிவித்து முடிவுற்றது.

2. 06.03.2020 மீண்டும் அமைச்சருடனான சந்திப்பு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்ப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதன்பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இயற்கை அனர்த்தம் காரணமாக நாம் மௌனம் சாதித்தோம். பின்னர்

3. 13.03.2023 மீண்டும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவருடனான சந்திப்பில் இது தொடர்பாக எடுத்துரைத்து தீர்வு காண்பதாக வாக்குறுதி அழிக்கப்பட்டது.

4. 18.04.2023 அமைச்சருடனான சந்திப்பில் ஓர் துணைக்குழு பரிந்துரை தேவை எனவும் அதற்கான பரிந்துரையை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு ஏற்படுத்தி ஒழுங்கு செய்ய கூறியும் அது நடைபெறவில்லை.

5. இதன் காரணமாக 12.10.2023 ஓர் கவன ஈர்ப்புப் போராட்டம் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மதிய போசன இடைவேளையில் ஏற்பாடு செய்யப்பட்டு எமது எதிர்வை வெளிப்படுத்தப்பட்டது.

6. 10.10.2023 எழுதப்பட்ட கடிதத்திற்கு இணங்க 02.11.2023 ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டு எமது எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
7. இதன் வெளிப்பாடாக 01.12.2023 அமைச்சர் மீண்டும் சந்திப்பை ஏற்படுத்தி எமக்கு இப் பிரச்சனைக்கு தீர்வு எட்டித்தருவதாக வாக்களித்தார்.

8. மீண்டும் அவரின் வாக்குறுதிக்கு பலனின்றி 18.01.2024 ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமும் கவனயீர்ப்புப் போராட்டமும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மேற்கொள்ளப்பட்டது.

9. பின்னர் உபகுழுவாகிய சம்பள நிர்ணய ஆணைக்குழு, திறைசேரி, ராஜாங்க நிதி அமைச்சர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சகிதம் அமைச்சர் முன்னிலையில் எமது பிரச்சினையை எடுத்துரைத்து தீர்வு பெற்றுத்தருவதாக கோரிய போதும் சம்பள நிர்ணய ஆணைக்குழு அங்கு சமூகமளிக்கவில்லை. இருப்பினும் அமைச்சர் 3 வார காலத்திற்குள் இதற்கான தீர்வை பெற்றுத்தருவதாக உத்தரவாதம் அளித்தார்.

10. பின்னர் இதன் கால அவகாசம் நிறைவுற்றதும் 13.02.2023 பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு முன் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது எமது தலைவர்களை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவர் அழைத்து ஒருவாரகால அவகாசம் கேட்டு பெற்றுக்கொண்டார்.

11. பின்னர் 28, 29.02.2024 இரண்டு முறை வேலை நிறுத்தத்துடன் கல்வி அமைச்சின் முன்பாக எதிர்ப்புப் போராட்டம் 29.02.2024 இடம்பெற்றது. அதன்போது அமைச்சின் செயலாளர்கள் எம்முடன் கலந்துரையாடி வெளிநாட்டு பணத்தில் உள்ள அமைச்சருடன் பேசி அடுத்துவரும் அமைச்சரவையில் இதற்கான தீர்வு எட்டப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

12. இவைகள் பலனளிக்காத போதே எமது தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை நாம் தொடர நேரிட்டது. அதன் முதற்கட்டமாக 12.03.2024 நண்பகல் 12 மணியிலிருந்து வெளியேறி 1½ நாள் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டோம். இவை வாராவாரம் தொடரும் எனவும் எச்சரித்தோம்.

13. அடுத்த வாரம் 19.03.2024 ஒருநாள் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

14. இதன் பலனாக 26.03.2024 மீண்டும் அமைச்சரை சந்தித்து பேராசிரியர் அமரதுங்கவுடன் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தார். இது 03.04.2024 இடம்பெறும் எனவும் அதனை அடுத்து வரும் அமைச்சரவையில் அதற்கான தீர்வு எட்டும் எனவும் வாக்களித்தார்.

15. 03.04.2024 கலந்துரையாடல் நாம் ஆயத்தமாக இருந்தும் எமக்கு அறிவித்தல்கள் கிடைக்கப்பெற்றும் அன்றையதினம் கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டது.

16. பின்னர் 05.04.2024 பேராசிரியர் அமரதுங்கவிடம் கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டும் சமூகமளிப்பதாக கூறிய அமைச்சர் அங்கு பிரசன்னமாகவில்லை. அந்த கலந்துரையாடல் பற்றி திறைசேரிக்கும் எவ் அறிவித்தலும் வழங்கப்படாமல் எம்மை அலைக்களித்து பின்னர் எம்மில் மூவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் 5 பேரிற்கான அனுமதி வழங்கப்பட்டது. அந்த கலந்துரையாடலும் எவ்வித பலனுமின்றி நிறைவுற்றது.

17. நாம் அதிருப்தியுடன் வெளியேறும் போது வழியில் எம்மை அமைச்சர் 24.04.2024 தாம் வெளிநாட்டுப்பயணம் சென்று திரும்பியவுடன் இவற்றிற்கான தீர்வு கிட்டும் என மீண்டும் வாக்குறுதியளித்தார். மேலும் 26.04.2024 எம்மை சந்திப்பதாகவும் உறுதியளித்தார்.

18. இதனைத்தொடர்ந்து நாம் 10.04.2024 பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு மற்றும் அமைச்சரிற்கு அவர் கோரிய கால அவகாசம் வழங்கி அதன் பின்னரும் தீர்வு கிட்டாவிடில் 29.04.2024 முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தை மேற்கொள்வோம் என்பதையும் இதனால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளுக்கும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவும் அமைச்சுமே பொறுப்பு என்பதனை கடிதமூலம் தெரியப்படுத்தியிருந்தோம்.

19. 24.04.2024 அன்றும் அளித்த எந்த வாக்குறுதிக்கான பதிலும் எட்டாத இடத்திலும் 26.04.2024 அமைச்சருடனான சந்திப்பிற்கான கடிதம் கிடைத்தது.

20. 26.04.2024 அமைச்சருடனான சந்திப்பும் எமக்கு மீண்டும் ஏமாற்றத்தையே அளித்தது. மீண்டும் 08.05.2024 உபகுழு பரிந்துரையின் பின்னர் எமக்கு அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்து தீர்வு பெற்றுத்தருவதாக கூறியது. எமக்கு மீண்டும் காலம் இழுத்தடிப்பு செய்யும் நடவடிக்கையாகவே நாம் கருதுகிறோம்.

அதுமட்டுமன்றி எமது இக் கோரிக்கைகள் கடந்த அரசு காலப்பகுதியில் நிதியமைச்சு, சம்பள நிர்ணய ஆணைக்குழு மற்றும் பிரதம மந்திரி செயலாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மீண்டும் இந்த ஆட்சியில் மேற்கொண்ட குழுக்களிற்கு நாம் நேரடியாக எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி அதனை அவர்கள் ஏற்றுக் கொண்ட பின்னரும் இவ்வளவு காலம் தாழ்த்துவது எம்மை இத் தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டத்திற்கு பலவந்தமாக இட்டுச் சென்றது.

இவ்வாறாக நாம் எமது நியாயமான இச்சம்பள முரண்பாடு, மற்றும் சம்பள அதிகரிப்புகள் பேரிக்கைகளை 8 வருடங்களுக்கு மேலாக கோரிக்கை விடுத்து பல உத்தரவாதங்கள், வாக்குறுதிகளள் தரப்பட்டும் அவை நிறைவேற்றாது காலம் தாழ்த்தும் இச் செயற்பாட்டினால் அதிருப்தி அடைந்த நாம் 02.05.2024 எமது தொழிலாளர் தினத்திற்கு அடுத்த நாள் 12 மணியளவில் இருந்து எமது தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தை இறுக்கமான முறையில் மேற்கொண்டுள்ளோம் – என்றுள்ளது.-

You might also like

Leave A Reply

Your email address will not be published.