துறவறத்தை கைவிடும் பெருந்தொகையான பிக்குகள்…காரணத்தை வெளியிட்ட சம்பிக்க!
வருடாந்தம் 2,000 பௌத்த துறவிகள் தமது துறவறத்தை கைவிட்டு வெளியேறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
அண்மையில், மானெல்வத்தை நாகாநந்த விகாரையில் வைத்து முன்னணி பௌத்த துறவிகள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டிருந்தார்,
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மதகுருமார்களின் ஆசீர்வாதம்
“நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் பல இன்னோரன்ன காரணிகளின் விளைவாக நாட்டில் வருடாந்தம் துறவறத்தை கைவிடும் பிக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது.
எனவே, பொருளாதாரத்தை புத்துயிர் பெறவைக்க அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும், இதற்காக பௌத்த மதகுருமார்களின் ஆசீர்வாதங்களையும் பெற வேண்டும் ” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் படையினர் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு கூலிப்படையினராக செல்வதற்கும் பொருளாதார நெருக்கடியே காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.