பிரச்சாரத்தில் பிரதமரின் வெறுப்புணர்வு பேச்சு – டெல்லி நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
தேர்தல் பிரச்சாரங்களில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசி வருகிறார்கள் என கூறி தொடுக்கப்பட்ட வழக்கில் டெல்லி நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை அளித்துள்ளது.
மோடி பிரச்சாரம்
10 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்யும் பாஜக அரசு மீண்டும் ஆட்சியை பிடித்திட பெரும் தீவிரம் காட்டி வருகின்றது. 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் சூழலில், பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
தமிழகத்தில் தேர்தல் நடைபெற்று முடிந்த உடனே, மத அரசியல் குறித்தான பேச்சுக்கள் பிரச்சாரங்களில் அதிகளவில் தென்படுவதாக பரவலாக பேசப்படுகிறது. அது ஆங்காங்கே தலைவர்களின் பேச்சிலும் தெரிகிறது.
பரபரப்பு உத்தரவு
இந்த சூழலில் தான், பிரதமர் மோடி தன்னுடைய தேர்தல் பிரச்சாரங்களில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதன் காரணமாக அவர் மீது F.I.R பதிவு செய்யும்படி கோரிக்கை வைத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இன்று இம்மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இது மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக பிரதமர் மோடி மதம் மற்றும் கடவுள் வழிபாட்டுத்தலங்களின் பெயரால் பாஜகவுக்கு வாக்கு சேகரிப்பதாக, அவரை 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட மனுவும் டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.