;
Athirady Tamil News

வடக்கில் இருவேறு பகுதிகளில் மீட்கப்பட்ட சடலங்கள்

0

யாழ்ப்பாணம் (Jaffna) – வடமராட்சி கிழக்கு கோவில் கடற்கரை பகுதியில் கிணற்றுக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கரைவலை வாடி ஒன்றில் மீன்பிடியில் ஈடுபடும் உடப்பு – புத்தளம் பகுதியை சேர்ந்த மனோராசன் என்பவரே இன்று (13.05.2024) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் திடீரென காணாமல் போனதையடுத்து அப்பகுதி மக்களால் தேடுதல் நடாத்தப்பட்டுள்ளது.

உடற்கூற்று பரிசோதனை
இதன்போது, உயிரிழந்தவர் அருகில் இருந்த கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்கு தகவலுக்கமைய சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

மற்றுமொரு சடலம்
அதேவேளை, முல்லைத்தீவு (Mullaitivu) – முறிகண்டி பிரதேசத்திலும் மற்றுமொரு ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு பின் பகுதியிலேயே குறித்த சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் சடலம் ஒன்று காணப்படுவதாக மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கிளிநொச்சி வைத்தியசாலை
இதற்கமைய, வவுனியா – ஊர்மிலாந்தோட்டம் பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஆசீர்வாதம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்ட முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான், சடலத்தை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து சென்று பிரேத பரிசோதனை மேற்கொண்ட பின் உறவினர்களிடம் கையளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.