சுதந்திர கட்சியின் தலைமை மாற்றம்: நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) புதிய தலைவர் விஜயதாச ராஜபக்ச (Wijeydasa Rajapaksha) மற்றும் பதில் பொதுச் செயலாளர் கீர்த்தி உடவத்த ஆகியோருக்கு இடையூறு விளைவிப்பதை தடுப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
குறித்த தடை உத்தரவை இன்றையதினம் (13.05.2024) கடுவெல மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
முன்னதாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தலைமைப்பதவியில் இருந்து விலகிய நிலையில், விஜயதாச ராஜபக்ச புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் மாற்றுப்பிரிவு
இந்நிலையிலேயே, அவர்களுக்கு சார்பான தடையுத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் இரண்டு பிரிவுகள் செயற்பட்டு வரும் நிலையில், மாற்றுப்பிரிவுக்கு தலைவராக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா (Nimal Siripala De Silva) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அந்த அணி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையிலேயே மைத்திரிபால சிறிசேனவுக்கு தலைவர் பதவியை தொடர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே மைத்திரிபால, தலைவர் பதவியில் இருந்து விலகி, விஜயதாச அந்த இடத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.