கனடாவில் ஐந்து மாகாணங்களுக்கு கடும் எச்சரிக்கை
கனடாவின் மேற்குப் பகுதியில் காட்டுத் தீ வேகமாக பரவி வருவதால் காற்றின் தரம் மாசடைந்துள்ளது.
இதனையடுத்து கனடாவின் ஐந்து மாகாணங்கள் மற்றும் ஒர் பிராந்தியத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஸ் கொலம்பியா, அல்பேர்ட்டா, சஸ்கற்றுவான், ஒன்றாரியோ, கியூபெக் மாகாணங்களிலும் வடமேற்கு பிராந்தியத்திற்குமே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவில் காட்டுத் தீ பரவுகை பருவ காலம் ஆரம்பம்
கனடாவில் காட்டுத் தீ பரவுகை பருவ காலம் ஆரம்பமாகியுள்ளது.
கனடவில் தற்பொழுது சுமார் 90 இடங்களில் காட்டுத் தீ பரவியுள்ளதாகவும் இதில் 12 இடங்களில் நிலவி வரும் காட்டுத் தீயானது கட்டுக்கு அடங்காதவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.