சுற்றுலா சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்: 10 வயது சிறுவன் மீது பகீர் குற்றச்சாட்டு
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்ற இத்தாலிய இளம்பெண் ஒருவர் பாலியல் தாக்குதலுக்குள்ளான நிலையில், தாக்குதல் நடத்தியவர் யார் என்பதை அறிந்து சம்பந்தப்பட்ட மாகாணத்தின் பிரீமியரே அதிர்ச்சியடைந்துள்ளார்.
சுற்றுலா சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்
இத்தாலி நாட்டவரான 24 வயது இளம்பெண்ணொருவர் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் குயின்ஸ்லாந்துக்குச் சென்றிருந்தபோது, ஒரு 10 வயது சிறுவனும், மேலும் மூன்று சிறுவர்களும் அவரை வழிமறித்துள்ளனர். அப்போது, அந்த 10 வயது சிறுவன் அந்த இளம்பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளான்.
அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், தனது மொபைலில் பொலிசாரை அழைக்க, அந்த சிறுவர்கள் அவரைத் தாக்கியுள்ளார்கள்.
இந்த விரும்பத்தகாத சம்பவம் தன்னை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக தெரிவித்துள்ள குயின்ஸ்லாந்து பிரீமியரான Steven Miles, பொலிசார் உடனடியாக அந்த சிறுவனைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அந்த சிறுவனையும் அவனது கூட்டாளிகளையும் கைது செய்துள்ள பொலிசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.