;
Athirady Tamil News

இனி ஒரு டிக்கெட் போதும் மக்களே; அனைத்திலும் ஈசியாக பயணிக்கலாம் – அரசு அசத்தல் அறிவிப்பு!

0

பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் திட்டம் விரைவில் அமலுக்கு வருகிறது.

ஒரு டிக்கெட்
சென்னையில் மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க பஸ், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் என பொது போக்குவரத்து வசதிகள் உள்ளன. இவற்றை பயன்படுத்தும் மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு வாங்கி பயணம் செய்து வந்தனர். இவ்வாறு பொதுமக்கள் தனித்தனி பயணச்சீட்டு பயன்படுத்தும் நிலையில்

இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் ஜூன் 2 வது வாரம் முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அதாவது, ஒரே ஒரு டிக்கெட் வாங்கினால் போதும் அதை வைத்து இந்த மூன்றிலும் பயணிக்க முடியும்.

அரசு அறிவிப்பு
இதற்காக ஒரு கார்டு அல்லது பாஸ் போன்ற அட்டை வழங்கப்படும். இந்த கார்டை மெட்ரோ நிலையத்தில் ஸ்கேன் செய்து அதில் பயணிக்க முடியும். மின்சார ரயில் பயணிகள் செக்கர் சோதனை செய்யும்போது இதை ஸ்கேன் செய்துகொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் பேருந்துகளிலும் நடத்துனர்களிடம் ஸ்கேன் செய்யும் கருவிகள் வழங்கப்படும்.

இந்த கார்டில் ரீசார்ஜ் செய்து மக்கள் சுலபமாக பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரிய நிலையில் அடுத்த மாதம் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது. இதன்மூலம், கியூஆர் கோடு பயன்படுத்தும் வசதியும் அமைய உள்ளது.

மேலும்,அந்த செயலியில் நீங்கள் தேர்வு செய்த முறையின் அடிப்படையில் பயணத்தின் மொத்த தொகை எவ்வளவு என்பது தெரியவரும். அதற்கான தொகையை செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.