;
Athirady Tamil News

இவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்: இந்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

0

ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்காவுக்கு செல்வோர் மற்றும் அங்கிருந்து இந்தியாவிற்கு வருவோர் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று இந்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி
ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய்த்தாக்கம் காணப்படுகிறது. இந்நிலையில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறை இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்காவுக்கு செல்வோர் மற்றும் அங்கிருந்து இந்தியாவிற்கு வருவோர் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று இந்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவர் 10 நாட்களுக்கு பிறகே மேற்கண்ட நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து செல்ல வேண்டும் அல்லது அங்கிருந்து இந்தியாவிற்கு வர முடியும்.

இது விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் சான்றிதழ் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும், இதுகுறித்த விவரங்களை https://ihpoe.mohfw.gov.in/index.php என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் இந்திய சுகாதார அமைச்சகம் அங்கீகரித்துள்ள 3 மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் தடுப்பூசி மையங்களில் போட்டுக் கொள்ளலாம்.

கிண்டியில் உள்ள பன்னாட்டு தடுப்பூசி மையம், கிங் நோய்த்தடுப்பு ஆராய்ச்சி நிலையம், சென்னை ராஜாஜி சாலையில் உள்ள துறைமுக சுகாதார நிறுவனம் ஆகிய இடங்களில் போட்டுக் கொள்ளலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.