;
Athirady Tamil News

தூக்கத்தில் இருந்த தளபதியை இழுத்துச் சென்ற அதிகாரிகள்: தொடரும் கைது நடவடிக்கை

0

ரஷ்ய தளபதி ஒருவர் விடிகாலை 5 மணிக்கு தூக்கத்தில் இருந்து எழுப்பி, அதிகாரிகளால கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தரதரவென இழுத்துச் சென்று
ஆயுததாரிகளான திரளான பொலிசார் அவரது குடியிருப்பை சுற்றிவளைத்து, கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 55 வயதான Yuri Kuznetsov சம்பவத்தின் போது தூக்கத்தில் இருந்துள்ளார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்துள்ளனர். உண்மையில் தூக்கத்தில் இருந்த அவரை படுக்கையில் இருந்து தரதரவென இழுத்துச் சென்று, விசாராணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றே கூறுகின்றனர்.

தளபதி Yuri Kuznetsov கைதாவதற்கும் ஒரு நாள் முன்னர், ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பரும் பாதுகாப்பு அமைச்சருமான Sergei Shoigu அதிரடியாக நீக்கப்பட்டார்.

அத்துடன் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மூவரும் பதவியை துறந்துள்ளனர். Sergei Shoigu-ன் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான Yuri Kuznetsov மீது தற்போது ராணுவ ரகசியங்கள் தொடர்பான வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

விசாரணை வட்டத்தில்
அவரது குடியிருப்பை சோதனையிட்ட பொலிசார், 875,000 பவுண்டுகள் மதிப்பிலான ரஷ்ய ரூபிள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் வெளிநாட்டு பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தங்க நாணயங்கள், கடிகாரங்கள் உட்பட ஆடம்பர பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை அதிகாரிகளே நேரிடையாக கைது நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர் என்றே கூறப்படுகிறது.

தளபதி Yuri Kuznetsov மீதான விசாரணை ராணுவ மட்டத்தில் முன்னெடுக்கப்படும் என்றே கூறப்படுகிறது. அவரது மனைவியும் விசாரணை வட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.